
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டை பகுதியில் கஜா புய லால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று சென் றார். அதற்கான பாதுகாப்புக்காக தஞ்சாவூரிலிருந்து எஸ்ஐ சரவ ணன் தலைமையில், 9 பேர் கொண்ட போலீஸ் குழுவினர் வேனில் சென்றுள்ளனர். அப் போது தஞ்சாவூர் - பட்டுக் கோட்டை சாலையில் ஒரத்தநாடு பகுதியில் எதிர்பாராதவிதமாக சாலை ஓரத்தில் இருந்த பள்ளத் தில் கவிழ்ந்து வேன் விபத்துக் குள்ளானது.
இதில் எஸ்ஐ சரவணன், காவ லர்கள் அருண், சதீஷ், சண்முகம், கவின் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும், வீரமணிகண் டன், குணா, ராகுல் ஆகியோ ருக்கு சிறு காயங்கள் ஏற்பட் டன. அவர்கள் ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் கஜா புயல் பாதிப்புகளை பார்வையிட்டு நிவாரண நிதியை வழங்கிவரும் துணை முதல்வர் கனமழையிலும் பயணத்தை தொடர்ந்து கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வை யிடுவதற்காக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முனைப்புடன் செயல்ப்படுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
