
எனினும், தமது தற்போதைய ஆட்சிக்காலத்திற்குள், அதாவது எதிர்வரும் 2022ஆம் ஆண்டுக்குள் இரண்டு அணு உலைகளை மாத்திரமே மூட முடியுமென குறிப்பிட்டுள்ளார்.
தேசிய ஆற்றல் மூலோபாயம் தொடர்பாக ஜனாதிபதி மக்ரோன் இன்று (செவ்வாய்க்கிழமை) தொலைக்காட்சி செவ்வியொன்றில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக 2035 ஆம் ஆண்டுக்குள் தமது இலக்கை அடையலாம் என்றும் ஜனாதிபதி மக்ரோன் குறிப்பிட்டார்.
பிரான்ஸின் பொருளாதார மற்றும் நட்பு நாடான ஜேர்மனி அணுசக்தியை முற்றாக கைவிட முயற்சித்து வருகின்ற போதும், தமது நாடு முற்றாக கைவிடும் எண்ணம் கிடையாதென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அணுசக்தியை முற்றாக கைவிடும் வாக்குறுதியில் தாம் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படவில்லையென்றும், எவ்வாறாறினும் தற்போது 75 வீத பயன்பாட்டில் காணப்படும் அணுசக்தியை 50 வீதமாக குறைக்கவுள்ளதாக குறிப்பிட்டார்.
அணு உலைகளை படிப்படியாக மூடவுள்ளதாகவும், 2035ற்குள் தமது இலக்கை எட்டலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
