
———- நமசிவய வாழ்க ———-
ஆழிசூல் அலை
வாழிசொல் தமிழ்
கூடி ஒலியெழம்
ஒரு நாடே
ஆதிசிவன் அவன்
ஒதிப்புகழ் தனை
பாடி போற்றிடும்
பொன் நாடே
நாதமுனி சிவன்
பாதம் பணிபவன்
மன்னன் இராவணன்
திரு நாடே
மறவர் உடல்தனை
தன்னில் உரமென
தாங்கி நின்றதோர்
தாய் நாடே
கோடி லிங்கங்கள்
மண்ணில் உள்ளன
மூலர் போற்றிய
சிவ பூமி
பஞ்ச ஈஸ்வரம்
கொண்டு பாரிலே
நின்று மிளிர்ந்திடும்
சிவ பூமி
குமரி கண்டமும்
நீரில் அழிந்திட
தீவாய் ஆனது
சிவ பூமி
எட்டுமோர் திசை
வெற்றி கண்டவன்
வீரன் இராவணன்
சிவ பூமி
சங்கரன் ஜெய சங்கரன்❤️
சிவனடியான்🙏
