LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, November 9, 2018

மாவலி கொண்ட ஈழ நிலம் (பகுதி -2)

திருக்கரசையிமாவலி கொண்ட ஈழ நிலம் (பகுதி -2)ல்....
(ஒரு நெடுங்கதையின் தொடக்கம்)

- பாலசுகுமார் -

திருமங்கலேஸ்வரர் ஆலயம் அதன் அழகு கங்கை கொண்ட சோழபுரத்துக்கு நிகரான கலைநயம்.இயற்கையும் ஸ்தபதிகள் படைத்த செயற்கயுமாய் திருக்கரசை எழில் கூட்டி நின்றது.நேற்றய நிகழ்வுகளிலிருந்து இன்னமும் விடுபடாத மன்னன் ராஜேந்திரன் கரசைப் புலவரின் கவித் திறனில் கிறங்கிப் போனான்.புராண வழி வந்த அகத்தியர் கதையயையும்  இயற்கை அழகையும் கரசைப் புலவர் தன் காவியத்தின் மூலம் தமிழுக்கு பெருமை சேர்த்திருக்கிறார் என்பதையும் ,கம்பனுக்கு நிகர் கரசைப் புலவர் என நேற்று பாராட்டியதையும் நினைத்து தான் கட்டமைத்துக் கொண்டிருக்கும் ஈழ சாம்பிராஜ்ஜியத்தின் எதிர்காலம் பற்றிய திட்டமிடலுடன் தன் தளபதிகளை அழைத்தான்.


கொட்டியாரத்தில் தன் அடுத்த நகர்வு நித்திலம் கொலிக்கும் முத்தூராக இருக்கட்டும் என கட்டளையிட்டான்.கோயிலுக்கு சற்று தூரத்தில் அமைக்கப் பட்டிருந்த பாடிவீடுகளில் வீரர்களின் உற்சாக அணிவகுப்பும் முத்தூரை நோக்கிய பயணத்துக்கான.உற்சாகமும் கரை புரண்டோடியது.எல்லா வேலைப்பாடுகளும் முடிவடைந்ததால் சிற்ப ஸ்தபதிகளும் புறப்பட தயாராகினர்.


கங்கை கரையில் தன் கால்களை நனைத்தபடி சரிந்து படுத்திருக்கும் மருத மரக் கிளைகளை சிம்மாசனமாக கொண்டு சிந்தனை வயப்பட்டான் .ராஜேந்திரன் இந்த ஈழக்கரையிலேயே இருந்து விடலாம் போலதெரிகிறது எத்தனை அழகு இந்த மண்ணுக்கு.ஈழத்தில் எங்கும் கானாத அபூர்வ அழகு கொடியாரத்துக்கு என மனம்  நிறை மகிழ்விலிருந்தான் .
அவன் காதலி திரிபுவனையின்  நினைவுகள் மாவலியின் அழகில் தெரிந்தது காவிரிக் கரையில் திரிபுவனையுடன் காதலில் மகிழ்ந்த நாட்களில் மூழ்கிப் போனான் ராஜேந்திரன்.இந்த எழிலையும் அழகையும் அவளும் காணவேண்டுமல்லவா அவளோடு இந்த மாவலி ஆற்றங்கரையில் .ஆகா எத்தனை இன்பமாக இருக்கும் என் காதலிக்கு ஒரு கனவு   மாழிகை அமைத்தால் அது இங்குதான் என பல் வேறு எண்ணங்களில் குழம்பிபோனான் .தன்னுடய இந்த ஈழ வருகையின் தளபதியாக வழி நடத்தும் தங்கக் கால் வளை குருகுலத்து ராயனை அழைத்தான்.ஈழத்தில் பெற்ற வெற்றிகள் எல்லாவற்றுக்கும் துணை நின்ற செயல் திறன் மிக்க தளபதி அவன்.


ஆரவாரத்துடன் முத்தூரை நோக்கி சோழப் பெரும்  படை புறப் பட்டது.யானைப் படையணி தலைவன் வேலப்பணிக்கன் ராஜேந்திரனை வணங்கி மன்னனுக்கான கஜ ராஜனை கொணர்ந்தான்  கஜ ராஜனில் கம்பீரமாக பாய்ந்தான் ராஜேந்திரன்.தன் பிழிறலால் மகிழ்ச்சியயை வெளிப்படுத்த படையணி நகர்ந்தது.

தொடரும்



 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7