LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, November 9, 2018

ஜமீல் கவிதைகள்

ஈழத்துக் கவிதைப்பரப்பில் புத்தாக்க மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன முன்னையதை கூறாது கூறல் அல்லது பழமையிலிருந்து விடுபடுதல் என்கிற கொள்கையை முன்வைத்து தமக்குள்ளேயே இருக்கின்ற ஏதாே ஒரு செய்தியை பிரதியாளன் மொழி வடிவ மாற்றத்துடன் கருத்தியல் பிரதியாக தருவதை அவதானிக்க முடியும்.இதன் உள்ளடக்கமே ஈழத்து கவிதைகள் மீதான பார்வை ஆச்சரியங்களைத் தருகின்றன 
குறிப்பாக ஜமீல் கவிதைகள் ஒவ்வொன்றுக்குமிடையில் கவிதை மாற்ற மனோநிலை வெளிப்பாட்டை வாசிப்பாளன் கண்டு கொள்ள முடியும்.கற்பனையிலிருந்து அதிகபட்சமாக விடுபடும் ஜமீல் கவிதைகள் இயற்கை,சமூகம்,சிறுவர்கள் அவர்களது அரசியல் என பல்வேறுபட்ட உள்தளங்களுக்குள் சென்று ஒவ்வொரு கவிதையும் வெவ்வேறு விடயங்களை பேசுகின்றன இந்த முனைப்புச் சாத்தியங்கள் ஜமீல் தன்னை கவிதை மனோநிலையில் சதா ஈடுபடுத்திக் கொள்வதன் நுண்ணிய பார்வை என கூறமுடியும்.
கற்பனையின்றி வாழ்வியல் வெளிப்பாடுகளை ஜமீல் கவிதைகள் முன் நகர்த்துவதனூடாக பௌதீக எல்லைகளுக்கு அப்பால் சென்று பிரதிகளை வாசிப்பாளனின் ஆவணங்களாக மாற்றுகின்றார் ஜமீல். இதற்கு பல காரணிகள் உண்டு முக்கியமான அடையாளங்களாக ஜமீல் 
கொள்ளும் பொருட்பரப்பு. அவருடைய புலன் கொள்ளும் கவனத்தின் பரப்பு.இன்னொன்று பிரதிகளில் வெளிப்படுத்தும் இயல்பு, மொழிதல், மொழி, சொற்கள் இவைகளைத் தாண்டி பிரதிகளுடன் வாசிப்பாளனை இணைக்கும் தன்மை.
கவிதையின் அடையாளக் கவிஞர்கள் பலரின் கவிதைகளை நான் வாசித்த போது என்னை மெல்லிய உணர்வுளுடன் தன் கவிதைகளுக்குள் அழைத்துப் போனவர் ஜமீல் இவரது கவிதைகள் நுட்பமும் ஆழமும் நம்மை வஸீயப்படுத்தும் மொழிதலைக் கொண்டுள்ளன.சொற்களின் உண்மையும் இவரது மனவெளிப்பாடும் நமது வரலாற்றின் அனுபவத் தொகுதியாக நம்முன் செல்வாக்கு செலுத்துகின்றன.
ஜமீல் வாழ்வனுபத்தின் மனத் தொகுதியினைச் சொல்வதோடு இயற்கை மீது இவருக்கிருக்கும் காதலையும் அதன் பிரியங்களையும் காட்சிப் படுத்துகிறார்.இயல்பாகவே கவிதையணுக்கள் இவருக்குள் பிரவாகம் எடுப்பதை நாம் ஏட்டுக் கொள்ள முடியும்.
சிறுவர்களின் சூழல் அல்லது அவர்களின் வாழ்வியல் நிலைமைகளின் தாக்கம் தனிமனிதனுக்குள் அமர்ந்து கொள்ளும் சிக்கல்களென பல செய்திகளை ஜமீல் கவிதைகள் சொல்லி நிற்பதையும் 
இந்தப் பிரதிகளுனூடாக அவர் கவிதைத் தளத்தில் தனது அகநிலை பதிவுகளின் மதிப்பீடுகளையும் சமகால சூழலியலையும் பாடுபொருளாக்குகிறார்.ஜமீலின் கவிதைகளில் காலாசாரத்தின் இருப்பு குரலாக வெளிப்படுகின்றது.இது காலத்தின் சாட்சியாகவும் பதிவாகவும் வாசிப்பாளனின் மனசுள் குந்திககொள்கின்றது.வாழும் காலத்தில் வாழும் படைப்பாக மற்றுமன்றி ஜமீலின் கவிதைகள் எதிர்கால நம்பிக்கையின் பதிவாக கவித்துவங்களால் எல்லைகள் தாண்டி நிற்கின்றன.
வாழ்க்கை குறித்தான காலத்தின் நெருக்ககடிகளை தன் மொழிவழியில் அடையாளப்படுத்துவதன் மூலம் சுலபமாகவே ஜமீல் நம் மனசுள் ஊடுருவுகிறார்.அதிநவீனம், பிரமாண்டம் இவைகளைத் தாண்டி மாய மொழி,கனவுலகம் பற்றியதான உரையாடல்கள் தொடங்கும் ஒரு காலசூழலில் தனித்துவமான கவிதைழொழிதலில் கவிதையுலகில் பரந்து நிற்கிறார் ஜமீல்.

மஞ்சள் பூக்களில் மலரும் 
சிறுமியின் அன்றாட வாழ்வு
_____________________________

பனிப் பொழியும் மூன்றாம் ஜாமம்
கூதலில் கொடுகி விறைத்தபடி
பேரூந்திற்காக தரிப்பிடத்தில் நிற்கிறேன்
வாலாட்டிகளுக்கிடையில் மூழும்
புணர்தலுக்கான ஓயாத சண்டையும்
ஆந்தையின் அலரலும் பீதியுறச் செய்கிறது
இராட்சத சர்ப்பமென ஊர்ந்து செல்லும்
தார்ச்சாலை மருங்கினில் 
அணியணியாக நெடுத்து நிற்கும்
பெயரறியா மரங்கள் உதிர்க்கும்
மஞ்சள் பூக்களின் மீந்த வாசனை
மூக்கை துளைக்கிறது
பனிக் காற்றில் திரண்டு வரும்
வாசனையினை நுகர்ந்தபடி
சிறிது நேரம் தாமதித்துச் செல்ல
அவாவுகிறது மனம்
சாலை தோறும் விரவிக் கிடக்கும் பூக்களை
விரைந்து செல்லும் வாகனங்களின்
சில்லுகளில் நசிபடுவதற்கிடையில்
விரைவாக சேகரம் செய்ய
கிடந்து போராடுகிறாள் சிறுமி
கண்ணைப் பறிக்கும் அதன் நிறம் மீதோ
தூக்கலான வாசனை மீதோ
அவளுக்கு எந்த ரசனையும் கிடையாது
அதனை விற்று தனதன்றாட வாழ்வினை
மலர்ந்திடச் செய்யவே
சுடும் குளிரையும் தாங்கி
தலையில் கூடையுடன் நிற்கிறாள்
நான் பேரூந்திலேறிச் செல்கிறேன்
உதிர்ந்த எல்லாப் பூக்களையும்
ஒன்றும் விடாது சேகரம் செய்தாளா
அன்றி வாகனங்களில் சில்லுகளில் நசிபட்டு 
சாலையோடு சாலையாகியிருக்குமா
அவளது ரொட்டித் துண்டும்
காலைத் தேநீரும் கை நழுவிச் சென்ரிருக்குமா
கிடந்து பதறுகிறது ஈரமான மனம்

 ஏ.நஸ்புள்ளாஹ்


 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7