தமிழ் சினிமாவில் பல படஙக்ளில் கொடூர வில்லனாக நடித்து புகழ்பெற்றவர் நடிகர் ஆனந்த்ராஜ். இவர் சமீப காலமாக காமெடி வேடங்களில் சில படங்களில் தோன்றிவருகிறார். இந்நிலையில் நேற்று காலை 11 மணி அளவில் அவரது தாயார் ராஜாமணி காலமானார். அவருக்கு 75 வயதிற்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.
அவரின் இறுதிசடங்குகள் இன்று பாண்டிச்சேரியில் நடைபெறவுள்ளது.