தமிழ் சினிமாவின் டாப் நட்சத்திரங்கள் அஜித் மற்றும் விஜய். இவர்கள் இருவரது ரசிகர்களும் இணையத்தில் எப்போதும் மோதல் போக்கை தான் கடைபிடித்து வருகின்றனர்.
இந்நிலையில் இவர்கள் இருவரையும் பற்றி இயக்குனர் விக்ரமன் ஒரு தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் பேசியுள்ளார். இவர் விஜய்யின் பூவே உனக்காக படத்தை எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதில் அவர் அஜித் பற்றி பேசும்போது "பைக் ரேஸ்ல கலந்துக்கிட்டு, முதுகுல 3-4 முறை அடிபட்டு, 36 தடவை சர்ஜரி பண்ணியும் போராடி ஜெயித்து வந்த பெரிய ஆர்ட்டிஸ்ட். அவர் பக்கா ஜெண்டில்மேன். அஜித் இன்னொரு MGR என்று சொல்லலாம்" என கூறியுள்ளார்.
