கனடாவில் ஒன்ராறியோ மாநிலத்திற்கான இடைத்தேர்தல் இடம்பெறவுள்ள திகதி விபரங்கள் கடந்த திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்ராறியோவிலுள்ள லீட்ஸ், கிரென்விலா, தவுசன்ட் ஐலேன்ட்ஸ், றிடியு லேக்ஸ் ஆகிய பிராந்தியங்களுக்கான தலைவர்களைத் தேர்வு செய்யும் விதமாகவே குறித்த இடைத் தேர்தல் இடம்பெறவுள்ளது. இத்தேர்தலை எதிர்வரும் டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி நடைபெறவுள்ளது. நெடுநாள் பழமைவாதக்கட்சி உறுப்பினராகவும் அமைச்சராகவும் கடமையாற்றிய கோட் பிரவுன், கடந்த மே மாதம் மாரடைப்பில் காலமாகியுள்ளார். இந்நிலையில், அவருடைய வெற்றிடத்தை நிரப்பும் விதமாகவும் குறித்த இடைத் தேர்தல் அமையவிருப்பது குறிப்பிடத்தக்கது.
