LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, November 1, 2018

மாவலி கொண்ட ஈழ நிலம் (பகுதி -1)

திருக்கரசையில்....

(ஒரு நெடுங்கதையின் தொடக்கம்)

- பாலசுகுமார் -

மாவலியாற்றின் அழகில் சொக்கிக் கிடந்தான் இராஜேந்திர சோழன் .இன்று ஆடிப் பெருக்கு காவிரி ஆறு எப்படி கரை புரண்டு ஓடுமோ அது போல மகாவலி கங்கையும் கரைகளில் வெண்ணிற நுரைகளை பனிப் படலம் போல் பரப்பிக் கொண்டு வெருகல் கழிமுகத்தை முத்தமிடும் அழகை ரசித்தான்

 ராஜேந்திரன்  காவிரியின் அழகில் லயித்துப் போவான் ஆடிப் பெருக்கு நாளில் காவிரிக் கரையெங்கும் மக்கள் மகிழ்ச்சிவெளத்தில் மிதப்பதை பக்கத்திலிருந்து பார்த்து  பழகியவன்.இன்று ஆடிப் பெருக்கு நாளில் மகாவலி கங்கையில் அந்த கொண்டாட்டங்களின் தொடர்ச்சியை காண ஆவலுடன்  காத்திருந்தான்.

தமிழும் கலையும் சைவமுமாய் இணைந்து அவன்  எழுப்பிய கங்கை கொண்ட சோழ புரத்தை உருவாக்கியதைப் போல .ஈழக் கரையில் மகாவலி கொண்ட திருமங்கலேஸ்வரத்தை அமைத்திருந்தான்.வெருகல் துறைமுகத்தில் நின்று பார்க்கும் போது திருமங்கலேஸ்வர் கோபுரம் அவன் பெருமையயை பறைசாற்றியது.

திருமங்கலாயின் திருக்கரசை தீர்த்தக் கரை மக்கள் வெள்ளத்தில் மகிழ்ந்து கிடந்தது ஆடித் தீர்த்த விழாவுக்காக கொட்டியாரத்தின் எல்லா ஊர்களிலிருந்தும்  கூடியிருந்தனர்.

திருக் கரசை காணிக்கை பொருட்களால் நிறைந்து கிடந்தது.மூதூரிலிருந்து முத்தும்,சேனையூரிலிருந்து இலுப்பை நெய்,இலுப்பஞ்சர்க்கரையும்,மலைமுந்தலிலிருந்து தேனும்,சம்பூரிலிருந்து சங்கும்,பொன்னும்,பள்ளிக்குடியிருப்பிருந்து பாலும் ,தயிரும்,நெய்யும்,கிளிவெட்டியிருந்து நெல்லும் அரிசியும்,மல்லிகைத் தீவிருந்து மாலைகளும் மலர்களுமாய் குவிய.கட்டைபறிச்சானிருந்து சந்தணம் கொண்டு வர,வெருகலிலிருந்து வெண்தாமரையும்,ஈச்சிளம் பற்றிலிருந்து செந்தாமரை மலர்களும்  மலையாய் குவிய தமிழில் மந்திரங்கள் ஒலிக்க திருக் கரசை மயங்கிக்  கிடக்கும் நாள் அது

ராஜேந்திரன் அந்த திருக்கரசையயை நோக்கித்தான் தன்  அரச பிரதானிகளும் படைகளும் சூழ தன்  வெண் புரவியில் பவனி வந்து கொண்டிருந்தான்.தமிழ்நாட்டு தஞ்சை மண் போல வயல் வெளிகளால் நிறைந்திருக்கும் கொட்டியாரத்தின் அழகை ரசித்தபடி பயணம் செய்தான்.ஆறும் ஆற்றிடை வெளிகளும்.வாய்க்காலும் வரப்பும.சேற்றிடை விரியும் சென்னெல் களனிகளிலும் தன் மனதை பறிகொடுத்த படி நகர்ந்தான் அவன்.

ஆடித் தீர்த்தம் ஈழத்தில் எங்கும்  இத்தனை சிறப்பாய் கொண்டாடப் படுவதில்லை.வற்றாத நதியாய் மாவலியாளின் படுக்கை விரிப்பு திருக்கரசை.நீண்டிருக்கும் மணல் வெளி,ஆங்காங்கே ஆரைப் பற்றைகளின் சங்கமம்.மருத மரங்களின் நீட்டம்.விண்ணுயர் மரங்கள் காற்றில் மோதி எழுப்பும் ஒலி விண் கட்டியாடும் விளையாட்டை நினைவு படுத்த இயற்கையின் அதிசயமாய் கரசையம்பதி சாட்சி சொல்லியது.

ஆண்டுக்கொரு முறை கரசை தீர்த்தம் நடை பெறுவதில் அதிசயம் ஒன்றுமில்லையே .என்ன  சிறப்பு இன்று ,பொலநறுவை ஜனநாத மங்கலம்,தம்பலகாமத்து சதுர்வேதி மங்கலம் என சோழ ஆட்சி தலைவர்கள் ஈழ தேசத்த்தின் புலவர்கள் என அறிவோர் கூடலும்,அரசாள்வோர் கூடலுமாய் திருக்கரசை திமிலோகப் பட்டது.

வாழ்த்தொலி விண்ணை பிளக்க ராஜேந்திரனின் திருக்கரசை வரவு அறியப்பட,மக்கள் முண்டியடித்துக் கொண்டு மன்னனைப் பார்க்க  முட்டி மோதினர்.


கரசை மணல் திட்டில் அலங்கரிக்கப் பட்ட பந்தல் புலவர் பெருமக்கள் எல்லாம் கூடியிருக்கின்றனர் மன்னன் அந்த இடத்துக்கு விரைகிறான் மும்முடிச் சோழன் வாழ்க என புலவர்கள் பண்ணிசைக்க அவர்கள் வாழ்த்தைப் பெற்றுக் கொண்டு ராஜேந்திரன் தனக்கான இருக்கையில் அமர்கிறான்.


எல்லோரும் யாரையோ எதிர்பார்த்திருக்கின்றனர் மன்னனும்  பொறுமையாய் எதிர்பார்ப்புடன் இருக்கிறான்.அப்போது கரசைப் புலவர் வாழ்க என்ற வாழ்த்தொலி விண்ணைப் பிழக்கிறது பல்லக்கில் பலபேர் சுமக்க கரசைப் புலவர் அழைத்து வரப் படுகிறார் .மன்னர் பெருமகனுக்கு வாழ்த்தும் வணக்கமும் சொன்ன கரசைப் புலவர் தனக்கான தனி இருக்கையில் அமர ,புலவர் பெருமக்கள் ,கரசைப் புலவரை வாழ்த்தி திருக்கரசை புராண காவியத்தை அரங்கேற்றும் படி சொல்ல .மன்னனும்  தன் வாழ்த்தை வெளிப்படுத்த.அறிஞர் பெருமக்கள் ஆவலுடன் காத்திருக்க கரசைப் புலவர் திருக்கரசை புராண காவியத்தை பாடத் தொடங்கினார்.

ஒவொரு பாடலும் புலவரின் கவியாற்றலை பறை சாற்ற திருக்கரசையின் அழகும் புராண கதை மரபும் சிறப்பாய் வெளிப்பட விடியும் வரை பாடலும் பயன் சொல்லலுமாய் இலக்கிய இரவாய் விடிய ஆடித் தீர்த்தம் இலக்கிய மரபோடு இணையும் விழாவாய் தொடர்கிறது.

தொடரும்....




 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7