LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, June 30, 2022

என் இனிய பட்டாம் பூச்சிக்கு கவிதை நூல் வெளியீட்டு விழா

(க.ஜெகதீஸ்வரன்)
"பல பேராசிரியர்களை, கலாநிதிகளை, சிரேஷ்ட விரிவுரையாளர்களை, நூற்றுக்கணக்கான விரிவுரையாளர்களைக் கொண்ட ஒரு பல்கலைக் கழகம் ஆற்றவேண்டிய பணியை தனி ஒருவனாக நின்று இலக்கியப் பணி ஆற்றும் மைக்கல் கொலினால் மட்டக்களப்பு மண் பெருமையுறுகிறது" என மகுடம் கலை இலக்கிய வட்டம் நடாத்திய மகுடம் வி. மைக்கல் கொலினின் என் இனிய பட்டாம் பூச்சிக்கு கவிதை நூல் வெளியீட்டு விழாவில் கிழக்குப் பல்கலைக் கழக உபவேந்தர் பேராசிரியர் வ. கனகசிங்கம் புகழாரம். நூல் வெளியீட்டு விழாவில் பிரதம விருந்தினர்களில் ஒருவராக கலந்து கொண்ட உபவேந்தர் தொடர்ந்து உரையாற்றுகையில் மைக்கல் கொலின் கிழக்குப் பல்கலைக்கழக முகாமைத்துவ பட்டதாரி. ஆனால் அவரது ஈடுபாடு முழுக்க முழுக்க கலை இலக்கிய துறை சார்ந்தே அமைந்திருந்தது. மகுடம் பதிப்பகம் மூலம் தனது ஏழு நூல்கள் உட்பட இதுவரை அறுபதிற்கு மேற்பட்ட நூல்களை அவர் பதிப்பித்துள்ளார். இதன் மூலமாக ஈழத்து இலக்கிய வெளிக்கு அவரது பங்களிப்பு மிக முக்கியமானது. இவரது இலக்கிய முயற்சிகளுக்கு மட்டக்களப்பில் கிடைக்கும் அதே ஆதரவும் வரவேற்பும் திருகோணமலையிலும் உண்டு. தொடர்ச்சியாக இயங்கிவரும் மைக்கல் கொலின் பல்கலைக்கழக இலக்கிய விருதுக்கும் தகுதியுடையவர் என்றார். சம கால இலக்கியப் பரப்பிலே படைப்பாளியாக மட்டுமன்றி பதிப்பாசிரியராகவும் தொடர்ச்சியாக இயங்கி வருபவர் மைக்கல் கொலின்..அவரது என் இனிய பட்டாம் பூச்சிக்கு என்ற இந்த கவிதை நூல் வெறுமனே காதல் கவிதைகள் அல்ல. தனது காதல் மனைவிக்கு எழுதிய காதல் கவிதைகள் ஊடாக அவர் சமகால பிரச்சினைகளை சொல்லிச் செல்கிறார். கல்லடிப் பாலம் முதல் கம்போடியா வரை சென்று தமிழர் தம் பாரம்பரியம், தமிழர்தம் வீரம், தமிழர் வரலாறு என தொன்மங்களுக்கூடாக ஒரு இனத்தின் வரலாற்றை பதிந்துச் செல்கிறார். என யாழ். மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்டச் செயலாளரான திரு. க.மகேசன் அவர்கள் தனது பிரதம விருந்தினர் உரையில் குறிப்பிட்டார். பெளர்ணமி கலை இலக்கிய நிகழ்வுத் தொடரின் 43 வது நிகழ்வாக மகுடம் கலை இலக்கிய வட்டம் நடாத்திய மகுடம் வி. மைக்கல் கொலினின் என் இனிய பட்டாம் பூச்சிக்கு கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா நேற்று (26 ம் திகதி) ஞாயிற்றுக் கிழமை மாலை 3.45 மணிக்கு மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில்மட்டக்களப்பு தமிழ்ச்சங்க தலைவரும், பிரபல தொழிலதிபரும், இலக்கிய ஆர்வலருமான சைவப்புரவலர் திரு. வி. றஞ்சிதமூர்த்தி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. யாழ். மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்டச் செயலாளருமான திரு.க.மகேசன், கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கம் ஆகியோர் பிரதம விருந்தினர்களாகவும் கிழக்குப் பல்கலைக் கழக வேந்தர் பேராசிரியர் ம.செல்வராஜா, மட்டக்களப்பு மாநகர முதல்வர் கெளரவ தி.சரவணபவன் ஆகியோர் அழைப்பு அதிதிகளாவும் கலந்து நூலை வெளியிட்டு வைத்தனர். நூலின் முதற் பிரதியை மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளரும், "சிப்ஸ் சினிமா" நிறுவன இயக்குனருமான Dr. குணசிங்கம் சுகுணன் அவர்கள் கிழக்குப் பல்கலைக் கழக உபவேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கத்திடமிருந்து பெற்றுக் கொண்டார். கிழக்குப் பல்கலைக்கழக ஆரம்ப செளக்கிய பராமரிப்பு பீட தலைவர் Dr. K. அருளானந்தம், நியூ பயனியர் வைத்தியசாலை இயக்குனர் Dr. E . ஸ்ரீ நாத், கிழக்குப் பல்கலைக் கழக Dr. S. சிவச்செல்வன், சிட்டி போரம்ஷ் சென்ரர் நிறுவன இயக்குனர் ஜனாப் S. L. M. ஆரிப், சண் பன்சி ஹவுஸ் நிறுவன உரிமையாளர் திரு. S. சிவபாதசுந்தரம் (அண்ணாச்சி), ஆகியோர் கெளரவ விருந்தினர்களாக கலந்து நூல் பிரதிகளை பெற்றுக் கொண்டனர். நூல் தொடர்பான சிறப்பானதொரு நயவுரையை கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக சிரேஷ்ட விரிவுரையாளர் திரு. க.மோகனதாசன் ஆற்றினார்.நூல் வெளியீட்டுரையை எழுத்தாளரும், அதிபருமான திரு. ச. மணிசேகரனும், வரவேற்புரையை மட்டக்களப்பு மாவட்ட எழுத்தாளர் சங்க பொருளாளர் கதிரவன். த.இன்பராசாவும் ஆற்ற நன்றியுரையை மகுடம். வி. மைக்கல் கொலின் நிகழ்த்தினார். மட்டக்களப்பின் கவிஞர்கள், படைப்பாளிகள், புத்திஜீவிகள் சமூகம் என பல தரப்பினரும் இந் நூல் வெளியீட்டில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கதாகும். இந் நிகழ்வை கவிஞர் ஜி.எழில் வண்ணன் தொகுத்து வழங்கினார்.


 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7