LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, February 15, 2022

வவுணதீவில் புதிய கோப் பிரஸ் வர்த்தக நிலையத்தை திறந்துவைத்தார் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன்!!


அரசாங்கத்தின் சுபிட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்திற்கமைவாக நாடளாவிய ரீதியில்
 'கிராமத்துக்கு கிராமம் வீட்டுக்கு வீடு' எனும் விஷேட நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் புதிய கோப் பிரஸ் (COOP FRESH) வர்த்தக நிலையங்கள் நிறுவப்பட்டு வருகின்றன.

கூட்டுறவுச் சேவைகள் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் வழிகாட்டலில் வினைத்திறன் மிக்க கூட்டுறவு சங்கங்களை தெரிவு செய்து
இவ்வேலைத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகிறது.

அதற்கு அமைவாக கிழக்கு மாகாணத்தில் 16 கோப் பிரஸ்  வர்த்தக நிலையங்களை நிறுவுவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் மட்டக்களப்பு வவுணதீவில் புதிய கோப் பிரஸ் வர்த்தக நிலையம் இன்று (15) திகதி திறந்து வைக்கப்பட்டது.

வவுணதீவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட ஈச்சந்தீவு, கன்னன்குடா ப.நோ.கூ.சங்கத்தின் தலைவர் நா. உருத்திரமூர்த்தி 
தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாரளுமன்ற உறுப்பினரும், மாவட்ட
அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன்
கலந்துகொண்டு புதிய கோப் பிரஸ் வர்த்தக நிலையத்தினை நாடா வெட்டி உத்தியோக பூர்வமாக திறந்துவைத்துள்ளார்.

இந் நிகழ்விற்கு விஷேட அதிதிகளாக கிழக்கு மாகாணம் கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருமான ஏ.எல்.எம். அஸ்மி, மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர்,
மட்டக்களப்பு கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே.வீ.தங்கவேல், உதவி பிரதேச செயலாளர் திருமதி.எஸ். சதாகரன், பிரதேச செயலக கணக்காளர் எஸ்.சுந்தரலிங்கம், பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் எம்.கோமளேஸ்வரன், மட்டக்களப்பு 
கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அலுவலகத்தின்அனைத்து கூட்டுறவு அபிவிருத்தி
உத்தியோகத்தர்கள், மட்டுப்படுத்தப்பட்ட ஈச்சந்தீவு - கன்னன்குடா பலநோக்கு கூட்றவுச் சங்கத்தின் முகாமையாளர் உள்ளிட்ட பணியாளர்களும் இதன்போது கலந்துகொண்டனர்.

கிராம மக்களுக்கு குறைந்த விலையில் அனைத்து பொருட்களையும் இலகுவான
முறையில் விநியோகம் செய்வதற்கான நடவடிக்கைகள் கோப் பிரஸ் வர்த்தக நிலையங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.














 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7