(க.ஜெகதீஸ்வரன்)
கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழாவை முன்னிட்டு பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட சிறந்த நூற்தேர்வில் கிழக்கு மாகாணத்தில் 2019ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நூல்களில் 'திருவாசகத்தில் சைவசித்தாந்தக் கோட்பாடு ' என்னும் நூல் ஆன்மீகம் சார் படைப்புத் துறையில் சிறந்த நூலாகத்தெரிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்றுமுன்தினம் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் குறித்த திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர்ச.நவதீன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சிறந்த நூலிற்கான காசோலை நூலின் ஆசிஜரியர்குமாரசாமி தவசீலனிற்கு வழங்கி கௌரவிக்கப்ட்டது.குறித்த நிகழ்வில் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் சிவகுமார் மற்றும் மண்முனை வடக்கு உதவிப் பிரதேச செயலாளர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
நூலாசிரியர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சைவசித்தாந்தத் துறையில் கற்று முதல் நிலை சித்தி பெற்று உதவி விரிவுரையாளராக் கடமையாற்றியவர். தனது முதுதத்துவமாணி (M.phi) கற்கையை அப்பல்கலைக்கழகத்தில் கலாநிதி விக்னேஸ்வரி பவநேசன் அவர்களின் மேற்பார்வையின் கீழ் செய்து வருகின்றார். இவர் 15 ற்கு மேற்பட்ட சர்வதேச மாநாடுகளில் பங்குபற்றி ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்திருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது. தற்போது கோறளைப்பற்று பிரதேச செயலகத்தில் பட்ட தாரிப் பயிலுனராகக் கடமையாற்றுகின்றார். தனது குரு பேராசிரியர் மா . வேதநாதன் அவர்களுக்கு அன்புக் காணிக்கையாக இந்நூலை எழுதியிருந்தார். அது கிழக்கு மாகாண விருதைப் பெற்றிருக்கிறது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் கைலாசநாதக்குருக்கள்இ பேராசிரியர் சதாசிவம் அவர்களின் ஞாபகார்த்தமாக வழங்கப்படுகின்ற விருதுகளையும் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.