LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C



ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, October 2, 2020

நிதி திருத்த மசோதாவின் இரண்டாவது வாசிப்பு: நாடாளுமன்றம் கூடும் திகதி அறிவிப்பு

நிதி திருத்த மசோதாவின் இரண்டாவது வாசிப்பு மற்றும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு சட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விதிமுறைகள் எதிர்வரும் 6ஆம் திகதி, நாடாளுமன்றத்தில்  விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து 7ஆம் திகதி, தேசிய கட்டடத் திருத்த வரி மசோதாவின் இரண்டாவது வாசிப்பு, பொருளாதார சேவை கட்டண திருத்த மசோதாவின் இரண்டாவது வாசிப்பு மற்றும் துறைமுகங்கள், விமான நிலைய திருத்த மசோதாவின் இரண்டாவது வாசிப்பு ஆகியன விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
அத்துடன், வெளிநாட்டு ஒப்பந்தங்கள் தொடர்பில் ஒத்திவைப்பு விவாதங்கள் இடம்பெறும் எனவும் நாடாளுமன்ற தகவல் தொடர்புப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
எதிர்வரும் 6ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரை கூட்டுவதற்கு நாடாளுமன்ற செயற்குழு கூட்டத்தில் இன்று தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7