கொடிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட மாகாணமாக கியூபெக் விளங்குகின்றது.
அங்கு இதுவரை மொத்தமாக 63,117பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 5,767பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் இதுவரை 55,724பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் கியூபெக்கில் 184பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு உயிரிழப்பு பதிவாகியுள்ளது. மேலும், 109பேர் குணமடைந்துள்ளனர்.
கனடாவில் இதுவரை மொத்தமாக வைரஸ் தொற்றினால், ஒரு இலட்சத்து 31ஆயிரத்து 124பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 9,141பேர் உயிரிழந்துள்ளனர்.