கொரோனா நெருக்கடி காரணமாக உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் வெளிநாட்டு தொழிலாளர்களை தொழிலில் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு மீண்டும் வீசா வழங்க மலேசியா நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, வரும் டிசம்பர் 31ஆம் திகதியின் பின்னர் மலேசிய அரசாங்கத்தால் இவ்வாறு வீசா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மலேசியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
கொரோனா நெருக்கடியால், வெளிநாட்டு வேலைவாய்ப்பு நடவடிக்கை முற்றிலும் முடங்கியுள்ள நிலையில், பல்லாயிரக்கணக்கானோர் வேலைகளை இழந்துள்ளனர். அத்துடன், பல்வேறு நாடுகளில் கொரோனா நெருக்கடிக்குள் சிக்கியுள்ள இலங்கையர்கள், தற்போது விசேட விமான சேவையின் ஊடாக நாட்டுக்கு அழைத்துவரப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.