இவர், இன்று (புதன்கிழமை) காலை 9.30 மணியளவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்த நிலையில் 6 மணிநேரம் வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டமைக்கான காரணத்தை தாம் அறிந்திருக்கவில்லை என அங்கு செல்லும் முன்னர் ஊடகங்களுக்கு ரிஷாட் பதியுதீன் தெரிவித்திருந்த நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாகவே வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவும் இன்று கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.