கைதிகளை பார்ப்பதற்கு அவர்களின் உறவினர்களுக்கு மீண்டும் அனுமதி வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெலிகட சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெலிகட சிறைச்சாலையில் அண்மையில் கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து கைதிகளை பார்ப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டதுடன் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வெலிகட சிறைச்சாலை நிர்வாகம் முன்னெடுத்திருந்தது.
இந்நிலையில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி எதிர்வரும் 15ஆம் திகதி முதல் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக சிறைச்சாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.