LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, July 18, 2020

நிர்மாணத்துறையின் புரட்சிக்கு தேசிய பொறியியலாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

நகர மற்றும் கிராம மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் நிர்மாணத்துறையில் புரட்சியை ஏற்படுத்த ஒன்றிணையுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் உள்நாட்டு பொறியியலாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
இலங்கை பொறியியலாளர் நிறுவனத்தின் அங்கத்தவர்களுடன் நேற்று (வியாழக்கிழமை) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்.
‘குடிப்பதற்கும் பயிர்ச் செய்கைக்கும் நீரை பெற்றுக்கொள்வதில் உள்ள தடைகள் காரணமாக நாடு முழுவதும் பல பிரதேசங்களில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குளங்கள் மற்றும் நீர்ப்பாசன கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. கிராமிய வீதி கட்டமைப்பின் அபிவிருத்தியும் துரிதப்படுத்தப்பட வேண்டும்.
மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற முடியாதிருப்பின் அபிவிருத்தி திட்டங்களில் எந்தப் பயனும் இல்லை. அவ்வாறே அடிப்படை தேவைகளை நிறைவேற்ற முடியாதிருப்பின் பல எதிர்பார்ப்புகளுடன் ஜனாதிபதியாக பதவியேற்ற என்னாலும் நாட்டு மக்களுக்கு எந்த பயனும் இல்லை’
பல வருடங்களாக அபிவிருத்தி திட்டங்களை வரைதல் முதல் நிர்மாணப் பணிகளை கண்காணிப்பு செய்தல் மற்றும் நிர்மாணங்களை மேற்கொள்ளுதல் போன்ற அத்தனை விடயங்களும் வெளிநாட்டு பொறியியலாளர்களினாலேயே மேற்கொள்ளப்பட்டது.
 அவர்கள் தலைமை வகித்த செயற்திட்டங்களில் மக்களின் தேவைகள் நிறைவேற்றப்படவில்லை. வெளிநாடுகளிலிருந்து வருகை தந்து செயற்திட்டங்களை முன்னெடுக்கும் கலாசாரத்தை நிறுத்த வேண்டும் எதிர்கால அபிவிருத்தி வேலைத்திட்டங்களை உள்நாட்டு பொறியியலாளர்களிடமும் நிறுவனங்களிடமும் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்டெடுப்பதில் இளைஞர்களின் மீது நம்பிக்கை வைக்கப்பட்டது. நிர்மாணத்துறையில் ஏற்படுத்த எதிர்பார்க்கும் புரட்சியிலும் உள்நாட்டு பொறியியலாளர்கள் மீது நம்பிக்கை வைக்கின்றேன்  , வரலாற்றில் மிகச் சிறந்த பொறியியலாளர்கள் உருவாகிய யுகத்தை மீண்டும் உருவாக்க வேண்டும்.  என்றும் தெரிவித்தார்.


 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7