நாட்டில் மேலும் 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 93ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு தொற்று உறுதிசெய்யப்பட்ட 9 பேரும் சவுதி அரேபியாவில் இருந்த நாட்டுக்கு அழைத்துவரப்பட்டவர்கள் என தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, 12 பேர் கொரோன தொற்றிலிருந்து குணமடைந்த இன்று வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறிய நிலையில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,967 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது 115 பேர் தொடர்ந்து சிகிச்சைபெற்று வருவதோடு 56 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர்.
இலங்கையில் கொரோனாவால் இதுவரை 11 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது