LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, June 10, 2020

கிழக்கின் தொல்பொருட்கள் இன, மத வேறுபாடு இன்றி பாதுகாக்கப்படும் – பாதுகாப்புச் செயலாளர்

கிழக்கு மாகாணத்தின் தொல்பொருட்களை இன, மத வேறுபாடு இன்றி பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்ண தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தின் தொல்பொருள் முகாமைத்துவம் குறித்த செயலணியின் உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே பாதுகாப்புச் செயலாளர் இதனை தெரிவித்துள்ளார்.
கிழக்கில் உள்ள தொல்பொருட்களை அடுத்த தலைமுறைக்காக பாதுகாப்பதற்கு இனமத மற்றும் ஏனைய பாகுபாடுகள் இன்றி அனைவரும் ஒத்துழைக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் பல தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் உள்ளன. அவை பல காரணங்களால் ஆபத்திற்குள்ளாகியுள்ளன என பாதுகாப்பு செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்த தொல்பொருட்கள் தேசிய பாரம்பரியத்துடன் தொடர்புடையவை என்பதால், இனமத வேறுபாடுகள் இன்றி அரசாங்கம் அவற்றை பாதுகாக்க விரும்புகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தொல்பொருள் பகுதிகளை பாதுகாப்பதற்காகவும் மீள உருவாக்குவதற்காகவும் செயலணி அனைத்து சமூகத்தினருடனும் இணைந்து செயற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தின் தொல்பொருட்களை பாதுகாப்பதற்காக பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்ண தலைமையில், ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டது.
இந்நிலையில், இதற்கு தமிழர் தரப்பில் தொடர்ச்சியாக எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

16Shares


 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7