இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 02 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,882 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
இன்றுமட்டும் மேலும் 56 பேர் குணமடைந்துள்ள நிலையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,252 ஆக உயர்ந்துள்ளது.
அந்தவகையில் இதுவரை அடையாளம் காணப்பட்ட 1882 நோயாளிகளில் 619 பேர் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் உள்ளதாகவும் அறிவித்துள்ளது.