மதுக்கடைகள் திறக்கப்படுகின்றன. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதுக்கடைகள் திறந்து இருக்கும் என்றும், ‘பார்’கள் இயங்க அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுபானக் கடைகளை சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தமிழக அரசின் இந்த முடிவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்படுவதற்கு கவிஞர் வைரமுத்துவும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கவிஞர் வைரமுத்து தமது டுவிட்டர் பக்கத்தில் மதுபான கடைகள் திறப்பு எதிராக பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
மது என்பது –
அரசுக்கு வரவு
அருந்துவோர் செலவு.
மனைவிக்குச் சக்களத்தி
மானத்தின் சத்ரு.
சந்தோஷக் குத்தகை
சாவின் ஒத்திகை.
ஆனால்,
என்ன பண்ணும் என் தமிழ்
மதுக்கடைகளின்
நீண்ட வரிசையால்
நிராகரிக்கப்படும்போது?
எனப் பதிவிட்டுள்ளார்.