கிரேக்கத்தில் இடம்பெற்ற கனேடிய இராணுவ ஹெலிகொப்டர் விபத்தை உறுதிப்படுத்த கனேடிய ஆயுதப்படைகளுக்கு 12 மணி நேரத்திற்கும் மேலாக கால தாமதமானதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்தநிலையில் இதுகுறித்து பிரதமர் ஜஸ்டினிடம் கேட்கப்பட்டது. இதுதொடர்பாக அவர் கூறியதாவது,
“நெருங்கிய உறவினர்களுக்கு தகவல் தெரிவிப்பது, பொதுமக்களுடன் தகவல்களைப் பகிர்வதற்கு முன்பு, குடும்பங்களுடன் கூடிய விரைவில் பேசுவது, இது போன்ற ஒரு சோகமான சம்பவம் நடக்கும்போது, அது தொடர்பில் இராணுவம் செய்யவேண்டிய மிக முக்கியமான நெறிமுறைகளைக் கொண்டுள்ளது. இந்த நெறிமுறைகள் அனைத்தும் பின்பற்றப்பட்டன” என கூறினார்.
கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி கிரேக்கத்தின் மேற்கு பகுதியில் உள்ள அயோனியன் தீவில் இருந்து கனடா இராணுவத்துக்கு சொந்தமான சிகோர்ஸ்கி சி.எச். 124 ரக ஹெலிகொப்டர் வழக்கமான ரோந்து பணிக்காக புறப்பட்டு சென்றபோது விபத்துக்குள்ளானது.
இதில் பயணித்த 6 நேட்டோ படை வீரர்கள் உயிரிழந்தனர். இதில் துணைப் படைத் தலைவர் (சப்-லெப்டினன்ட்) அபிகாயில் கவ்பரோவின் உடல்பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. மீதமுள்ளவர்களின் உடல்கள் தேடப்பட்டு வருகின்றன.