பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன் தினம் (திங்கட்கிழமை) மாலை 5.45 மணியளவில் குடும்பத்துடன் இருந்த சர்ரே சிறுவன், காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது.
குறித்த 14 வயது சிறுவன், நியூட்டனில் உள்ள ஹைலேண்ட் க்ரீக் பூங்காவில் கடைசியாக சைக்கிள் ஓட்டுவதைக் கண்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, பொலிஸாரின் ஹெலிகொப்டரும், சர்ரே தேடல் மற்றும் மீட்பு அணியும் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அத்துடன், பொதுமக்களிடம் சிறுவன் காணாமல் போனது குறித்து அறிவிப்பை வெளியிட்டு, தகவல் தெரிந்தவர்கள் தங்களை தொடர்புக் கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டனர்.
இந்தநிலையில், குறித்த சிறுவன் பாதுகாப்பாக இருப்பதாக சர்ரே பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் சிறுவனைக் கண்டுபிடிக்க உதவிய பொதுமக்களுக்கு பொலிஸார் நன்றி தெரிவித்தனர்.