இலங்கையர்களுக்கும் ஆசி வேண்டி நாட்டின் அனைத்து விகாரைகளிலும் இடம்பெற்ற பிரித் பாராயண நிகழ்வின் அங்குரார்ப்பண நிகழ்வு கலாநிதி சங்கைக்குரிய எல்லாவல மேதானந்த தேரரின் தலைமையில் வாத்துவ, மொல்லிகொட பிரவசனோதய பிரிவெனா விகாரையில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்றது.
வாத்துவை மொல்லிகொடை பிரவசனோதய பிரிவெனா விகாரையின் விகாராதிபதி பாலி, பௌத்த பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் கலாநிதி சங்கைக்குரிய ஹோமாகம தம்மானந்த தேரரின் வழிகாட்டலில் இந்நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.
வரலாறு நெடுகிலும் நாடு அனர்த்தங்களுக்கு முகம் கொடுத்த வேலையில் பிரித் பாராயணம் செய்து ஆசி வேண்டி பிரார்த்திக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் மகா சங்கத்தினர் ஜனாதிபதிக்கு அறிவித்ததற்கு ஏற்ப இந்நிகழ்ச்சித்திட்டம் நாடளாவிய ரீதியில் ஏற்பாடுசெய்யப்பட்டது. ஜனாதிபதியின் விசேட கருத்திட்டப் பணிப்பாளர் ஆர்.ஏ.டீ. சிரிசேன உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.