LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, May 10, 2020

தமிழகத்தில் 6500 பேருக்கு கொரோனா: சென்னையில் வைரஸ் தீவிரம்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 500ஐ கடந்துள்ளது.

அங்கு தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) ஒரேநாளில் 529 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மாநிலம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 535 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் ஆயிரத்து 824 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இதனைவிட, வைரஸ் தாக்கத்தினால் இன்று மட்டும் 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மாநிலத்தில் மொத்த உயிரிழப்பு 44 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறிருக்க, கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமான சென்னை உள்ள நிலையில் அங்கு இதுவரை 3 ஆயிரத்து 3330 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனைவிட, கடலூரில் 394 பேர், விழுப்புரத்தில் 293 பேர்,  திருவள்ளூரில் 290 பேர், அரியலூரில் 271, செங்கல்பட்டில் 224 பேர் என அதிகபட்சமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக உள்ளன.

மேலும், கோவை-146, தருமபுரி-4, திண்டுக்கல்-108, ஈரோடு-70, கள்ளக்குறிச்சி-59, காஞ்சிபுரம்-114 கன்னியாகுமரி-24, கரூர்-47, கிருஷ்ணகிரி-10, மதுரை-113, நாகப்பட்டினம்-45, நாமக்கல்-77, நீலகிரி-14, பெரம்பலூர்-95, புதுக்கோட்டை-5, இராமநாதபுரம்-25, ராணிப்பேட்டை-60, சேலம்-35, சிவகங்கை-12, தென்காசி-52, தஞ்சாவூர்-66, தேனி-56, திருப்பத்தூர்-27, திருவண்ணாமலை-82, திருவாரூர்-32, தூத்துக்குடி-30, திருநெல்வேலி-80, திருப்பூர்-114, திருச்சி-65, வேலூர்-29, விருதுநகர்-37 என கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7