கொரோனா தடுப்புப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து இதுவரை 347 கோடியே 76 இலட்சத்து 15 ஆயிரத்து 440 ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை முதலமைச்சர் எடப்பாடி பழநிசாமி தனது ருவிற்றர் பக்கத்தில் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ளார்.
கடந்த 5 நாட்களில் மட்டும் நிறுவனங்கள், மக்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்டோரிடம் இருந்து 41 கோடியே 34 இலட்சத்து 4 ஆயிரத்து 882 ரூபாய் நிதி பெறப்பட்டுள்ளதாக அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
10 இலட்சம் ரூபாய்க்கு மேல் நிதி அளித்தவர்கள், சிறுகச்சிறுக சேர்த்த பணத்தை வழங்கியவர்கள், ஒருநாள் ஊதியத்தை வழங்கிய நிறுவன ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு முதலமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.





