டெல்லி கன்டோன்ட்மென்ட் பகுதியிலுள்ள இராணுவ மருத்துவமனையின் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் ராணுவத்தினர், முன்னாள் ராணுவத்தினர் என 24 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 24 பேருக்கும் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.
அண்மையில் அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவரிடம் இருந்து 24 பேருக்கும் கொரோனா பரவியிருக்கலாம் என கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவர்களுக்கு கொரோனா சிகிச்சையும் கூடுதலாக அளிக்கப்படுகிறது.
இதேபோல் கொல்கத்தா கடற்படை தளத்தில் 2 மாலுமிகளுக்கு நோய் தொற்று உறுதியாகியுள்ளதால் 160 கடற்படை அதிகாரிகள், மாலுமிகள் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.