நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
காலியில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர்,கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தாக்கம் குறைய பல ஆண்டுகள் ஆகும் என்றும் தெரிவித்தார்.
கொரோனா வைரஸின் தாக்கம் 2023 வரை உலகை கடுமையாக பாதிக்கும், உலகின் பல நாடுகள் இதிலிருந்து 2025 க்குள் மீள தொடங்கும் என்றும் அதற்குள் இலங்கையும் மீண்டு வருவதை ஆட்சியாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நெருக்கடி மோசமடைந்துவிட்டால் நாடு கடுமையான வறுமையை எதிர்கொள்ளும் அதேவேளை நாட்டின் கல்வி முறை தொடர்பாகவும் புதிய உலகளாவிய பொருளாதார முறைகளுக்கு ஏற்ற வகையில் சட்ட கட்டமைப்பையும் மாற்ற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நேரத்தில் நாடு எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என்றும், நெருக்கடி மோசமாகும் என்பதால் முடிவுகள் தாமதப்படுத்தப்படக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.