LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, April 29, 2020

பிரபல பொலிவுட் நடிகர் இர்பான் கான் உயிரிழப்பு

உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த பிரபல பொலிவுட் நடிகர் இர்பான் கான், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
.

பிரபல பொலிவுட் நடிகர் இர்பான் கான் 1988-ம் ஆண்டு வெளியான சலாம் பாம்பே என்ற படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

பின்னர் வில்லன், குணச்சித்திர வேடம் என அனைத்திலும் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தார். இவர் பொலிவுட் மட்டுமல்லாது ‘லைஃப் ஆஃப் பை’, ஜுராசிக் வேர்ல்ட் போன்ற ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். விளம்பர படங்களிலும் மொடலிங் செய்து வந்தார்.

இவர் நியூரோ எண்டாக்ரின் ட்யூமர் எனப்படும் அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக நேற்றிரவு அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 54. அவரது மறைவு பொலிவுட் பிரபலங்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சனிக்கிழமை இவரின் தாயார் சாயிதா பேகம், 95, ஜெய்ப்பூரில் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார். கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் லாக்டவுன் போடப்பட்டுள்ளதால், ஜெய்பூருக்கு செல்ல முடியாத நிலையில், வீடியோ கோலில் அழுத படி தாயின் இறுதி சடங்குகளை இர்பான் கான் பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7