பிரித்தானியாவின் முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றான செயின்ட் அண்ட்ரூஸ் பல்கலைக்கழகமானது கொரோனா தொற்றினால் அதன் நிதிநிலைமையில் பாரிய இழப்பைச் சந்தித்திருக்கிறது என கார்டியன் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நெருக்கடிக்குப் பதிலுறுத்தும் வகையில், ஆராய்ச்சிகளுக்கான நிதியை இரட்டிப்பாக்குமாறும், பாதிப்புற்ற கல்வி நிறுவனங்களுக்கு அவசரகால கடனை வழங்குமாறும், அத்துடன் 2020-21 இல் பட்டப்படிப்பிற்கு உள்வாங்கும் மாணவர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துமாறும் அரசாங்கத்திடம் கோரி பிரித்தானிய பல்கலைக்கழகங்கள் திட்டத்தை முன்வைத்துள்ளன.
பிரித்தானியாவிலுள்ள பல்கலைக்கழகங்கள் பாரிய நிதிநெருக்கடியை எதிர்கொள்வதாலேயே அரசாங்கத்தின் உதவியை நாடியிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
செலுத்தப்படாத மாணவர் கடன்களிலிருந்து இழப்புகளைக் குறைத்துக்கொள்ள வழிவகுக்கும் மாணவர் சேர்ப்பை மட்டுப்படுத்தும் பிரித்தானியப் பல்கலைக்கழகங்களின் ஆதரவை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது. பல்கலைக்கழகங்கள் மாணவர் சேர்ப்பை மட்டுப்படுத்த வேண்டுமென என அமைச்சர்கள் அழுத்தி வந்ததை கார்டியன் கடந்த மாதம் வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.