இந்தியாவிலும் நாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2902 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று ஒரே நாளில் 206 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 184 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சமூக இடைவெளியை மக்கள் கடைபிடிக்க வேண்டுமென்றும், சமூக விலகல் வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்நிலையில் அத்தியாவசியத் தேவைக்காக வீட்டைவிட்டு வெளியே வந்தால் முகக் கவசம் அணியுமாறு மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது.
முகக்கவசம் அணிவது சமூக பரவலை தடுக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.