ஆலய தொண்டர்கள் சிலர் இணைந்து மண்டபத்தை கொம்பிறசர் ஊடாக தண்ணீர் பாய்ச்சி கழுவிக் கொண்டிருந்த போது, அதிலிருந்து மின் ஒழுக்கு ஏற்பட்டநிலையில் குறித்த நபரைத் தாக்கியுள்ளது.
இச்சம்பவத்தையடுத்து அவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும்போது உயிரிழந்தார் என பொலிஸார் தெரிவித்தனர்.
மல்லாகம் துர்க்காபுரத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான சண்முகராஜ் செந்தூரன் (வயது-51) என்பவரே உயிரிழந்தார்.
உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக தெல்லிப்பழை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.