இதன்போது 36 வயதான அரீமா நஸ்றீன், (Areema Nasreen) கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில், வால்சால் மனர் (Walsall Manor Hospital) மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில், வென்டிலேட்டரின் இயக்கத்தில் வைக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஒருவாரம் கழித்து மரணித்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர் இந்த வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவிலேயே பணிபுரிந்ததாக தெரிவிக்கும், வால்சால் ஹெல்த்கெயார் NHS டிரஸ்டின் (Walsall Healthcare NHS Trust’s) தலைமை நிர்வாகி ரிச்சர்ட் பீக்கன், அவர் “அணியின் மிகவும் மரியாதைக்குரிய உறுப்பினர்” எனக் குறிப்பிட்டள்ளார்.
இதேவேளை கென்ட்டின் மார்கேட்டில் உள்ள ராணி எலிசபெத் ராணி தாய் மருத்துவமனையில் (Queen Elizabeth the Queen Mother Hospital ) பணிபுரிந்த மற்றொரு தாதியரான அமி ஓ’ரூர்க்கும் (Aimee O’Rourke,) வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இறந்துள்ளார்.
“மிகவும் திறமையான” தாதியரான இவர் கோவிட் -19 க்குரிய நேர்மறையான பரிசோதனையை மேற்கொண்ட பின்னர் நேற்று வியாழக்கிழமை இரவு தான் பணிபுரிந்த மருத்துவமனையில் இறந்தார்.
மூன்று வயதான குழந்தைக்கு தாயான திருமதி ஓ’ரூர்க்குக்கு அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் “மனம் உடைந்த நிலையில்” அஞ்சலி செலுத்தியுள்ளதாக வைத்தியசாலைத் தரப்பினர் தெரிவித்தனர்.
இன்று வெள்ளிக்கிழமை அதிகாலையில் இறந்த தாதியர் நஸ்றீன், (Areema Nasreen) “ஒரு சிறந்த தாதியராக எப்போதும் இருக்க வேண்டும் என்று கனவு கண்டார்” “எந்தவொரு மரணமும் பேரழிவு தரும், ஆனால் நம்முடையதை இழப்பது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது” என NHS டிரஸ்டின் தலைமை நிர்வாகி ரிச்சர்ட் பீக்கன் குறிப்பிட்டார். மேலும் நஸ்றீன் (Areema Nasreen) வைரஸ் பாதிப்புக்கு முன்னர் ஆரோக்கியமாக இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்ததாகவும் பீக்கன் கூறினார்.