மேலும், “அரியாலை போதகரோடு கூடியளவு தொடர்புகளைப் பேணியவர்களாக பலாலிப் பகுதியில் தனிமைப்படுத்தலில் தற்போது இருக்கின்ற மேலும் 10 பேருக்கான பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டன.
அவற்றுக்கான ஆய்வுகூடப் பரிசோதனை முடிவுகள் தற்போது வெளிவந்துள்ளன. அவர்களில் மூவருக்கு தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரியாலையில் ஆராதனை நடத்திய சுவிஸ் போதகருடன் நெருங்கிப் பழகியதாக பலாலியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 20 பேரில் 10 பேருக்கு நேற்று முன்தினம் பரிசோதனை மேற்கொண்ட நிலையில் அவர்களில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இந்நிலையில் ஏனைய 10 பேருக்கு இன்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவர்களில் மூவருக்கு வைரஸ் தொற்று உள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 6 பேருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த இருபது பேரும் கொரோனா தொற்றை அறியும்பொருட்டு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களை வெளியே விடுவதற்காக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோதே இவ்வாறு கொரோனா தொற்று உள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஏற்கனவே கட்டட ஒப்பந்தக்காரர் ஒருவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனடிப்படையில் சுவிஸ் போதகர் மூலமாக யாழில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.