யாழ்ப்பாணம், குருநாகல், மருதானை பகுதிகளைச் சேர்ந்தவர்களே புதிதாக நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள மத போதகர் ஒருவருக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 18 பேர் முழுமையாகச் சுகமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன் இருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.