மூடவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமைப்பிலுள்ள நாடுகளின் பிரஜைகளைத் தவிர வௌிநபர்கள் ஐரோப்பிய ஒன்றிய எல்லைக்குள் வருவதைத் தடைசெய்யும் எதிர்பாராத நகர்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையானது 26 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன், ஐஸ்லாந்து, லெற்றென்ஸ்ரைன், நோர்வே, சுவிட்சர்லாந்து, பிரித்தானியா ஆகிய நாடுகளின் பிரஜைகளைப் பாதிக்காது என தெரிவிக்கப்படுகின்றது.
இத்தாலி மற்றும் ஸ்பெய்ன் ஆகியவற்றில் கொரோனாவினால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்துவரும் நிலையிலும், பிரான்ஸ் இறுக்கமான கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையிலும் இந்தத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் தரவுகளின் அடிப்படையில், உலகளாவிய ரீதியில் கொரோனாவினால் 185,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 7,500 பேர் உயிரிழந்துள்ளனர்.