அதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரின் மனைவி பிரியங்கா நியோமாலி ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று (புதன்கிழமை) கோட்டை நீதிமன்றத்தில் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவர்களை தலா 2 பில்லியன் ரூபாய் பெறுமதியான ரொக்க பிணையிலும் 2 மில்லியன் பெறுமதியான சரீர பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு எயார்பஸ் வகையிலான 10 விமானங்களைக் கொள்வனவு செய்த கொடுக்கல் வாங்கலின் போது 2 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சம் பெற்றுக்கொண்டு, அதனை அவுஸ்திரேலியாவின் வங்கிக் கணக்கொன்றில் வைப்பிட்டு நிதிதூய்தாக்கலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதனை அடுத்து கடந்த 6 ஆம் திகதி சந்தேகநபர்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகிய போது கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.