கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் 144 தடை உத்தரவு நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், தூத்துக்குடியில் இன்று மாலையே பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன.அரசின் எச்சரிக்கைகளை மீறி மக்கள் அதிகமான அளவில் கடை வீதிகளில் நடமாடியதைத் தொடர்ந்து அதிகாரிகள் அறிவுறுத்தலின் பேரில் கடைகள் இன்று மாலை அடைக்கப்பட்டன.
மேலும், 144 தடை உத்தரவு நாளை மாலை அமுலுக்கு வரவுள்ளதால் மக்கள் இன்று மாலையில் சந்தைகள், பலசரக்கு கடைகளில் குவிந்து அத்தியாவசிய பொருட்களை வாங்கினர்.
இந்தியாவில் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்றுமக்கள் ஊரடங்கு நடைமுறைப்படுத்தது.





