நடவடிக்கை எடுக்கக்கோரி காங்கிரஸ் அல்லாத எதிர்கட்சியினர், ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
குறித்த கடிதத்தில், “டெல்லியில் அமைதி திரும்ப தேவையான நடவடிக்கைகள் எடுக்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவிட வேண்டும்.
வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியவர்கள், வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிய வேண்டும். டெல்லி கலவரம் தொடர்பாக நேரில் பேச நேரம் ஒதுக்க வேண்டும்.
வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், மக்களை சந்தித்து அவர்களுக்கு நம்பிக்கை அளிக்க எதிர்கட்சிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.