LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, March 18, 2020

கொரோனா வைரஸ் : பரிசோதனை செய்ய தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி!

கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய 51 தனியார்
ஆய்வகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரி ஒருவர் கூறுகையில்,  “இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் 72 ஆய்வகங்கள் செயற்பட்டு வருகிறது. இங்கு கொரோனா வைரஸ் சோதனை செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

இந்த மாத இறுதிக்குள் விஞ்ஞான ஆராய்ச்சி கழகம் பயோ-டெக்னாலஜி துறை மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி,  வளர்ச்சி கழகம் மேலும் 49 ஆய்வகங்கள் செயற்படும்.

அதே போல் தனியார் ஆய்வகங்களும் கொரோனா வைரஸ் சோதனையை இலவசமாக செய்ய கேட்டு கொள்ளப்படுவார்கள். 51 தனியார் ஆய்வகங்கள் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய அனுமதிக்கப்படும். இவைகள் விரைவில் செயற்பட தொடங்கும்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்களுக்கு மட்டுமே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியதாக இதுவரை ஆவணங்கள் இல்லை.

மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளதாக ஆவணங்கள் உறுதிப்படுத்தப்பட்டால் எங்களது ஆய்வை அடுத்த கட்டத்துக்கு மாற்றுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7