இராமநாதன் தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி யாழில் இன்று (புதன்கிழமை) வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளது.
இன்று காலை கைலாசபிள்ளையார் கோவில் மற்றும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இடம்பெற்ற வழிபாடுகளை தொடர்ந்து ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் யாழ் அலுவலகத்தில் முதன்மை வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் மற்றைய வேட்பாளர்கள் வேட்புமனுபத்திரத்தில் கையொப்பம் இடும் நிகழ்வு இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து யாழ். மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்தில் தமது வேட்புமனுவை கையளித்த அங்கஜன் இராமநாதன் ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியில் ‘இம்முறை மக்கள் ஆணையோடும், அங்கீகாரத்தோடும் நாடாளுமன்றம் தெரிவாகி மக்களுக்கான சேவையை தொடர்வேன்’ என நம்பிக்கை வெளியிட்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சி சார்பில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் விபரம் :