(புதன்கிழமை) முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.
மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில், முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினுடைய பணிப்பாளர் மற்றும் மேலதிக மாவட்ட செயலாளர், மாவட்ட செயலக கணக்காளர், பிரதேச செயலாளர்கள், முப்படையினை சேர்ந்தவர்கள், பொலிஸார், அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த விசேட கலந்துரையாடலில் கொரோனா வைரஸிலிருந்து எவ்வாறு பாதுகாப்பது? என்பது தொடர்பாகவும் முல்லைத்தீவு மாவட்ட மக்களை பாதுகாப்பதற்காக எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.