தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன, தாமரை மொட்டு சின்னத்திலேயே போட்டியிடும் என அறிவித்துள்ளது.
குறித்த அறிவிப்பின் இன்று (செவ்வாய்க்கிழமை) பொதுஜன பெரமுன தேசிய தேர்தல் ஆணைக்குழுவுக்கு தெரியப்படுத்தியுள்ளது.
இவ்வாறு தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள இந்தக் கூட்டணியில் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்றம் நேற்று நள்ளிரவு முதல் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறும் என்றும் மார்ச் 12 -19 முதல் வேட்புமனு தாக்கல் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து புதிய நாடாளுமன்ற அமர்வுகள் மே மாதம் 14 ஆம் திகதி கூடும் என்றும் அதிவிசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.