நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை அடுத்து தடுப்பு நடவடிக்கைகளுக்காக நிதி உதவி அளிக்கும்படி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையடுத்து ஏராளமான பிரபலங்கள், நிறுவனங்கள் தாராளமாக நிதி உதவி அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் நிவாரண நிதியை அதிகரிக்க மத்திய அரசு புதிய சலுகையை அறிவித்துள்ளது.
இதன்படி, நிவாரணமாக நிறுவனங்கள் அளிக்கும் நிதி உதவி, கம்பனிகளின் சட்டங்களின் கீழ் சமூக நல செலவாக கருதப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.