45.6 சதவீதம் உயர்ந்ததாக, ரியல் எஸ்டேட் சபையின் அறிக்கையொன்று தெரிவிக்கின்றது.
கடந்த பெப்ரவரி மாதம், பல பட்டியல் சேவை அமைப்பு மூலம் 7,256 வீடுகள் விற்கப்பட்டதாக ரொறன்ரோ பிராந்திய ரியல் எஸ்டேட் சபை தெரிவித்துள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வீடுகள் விற்பனையுடன் ஒப்பிடும் போது, அந்த மாதத்தில் 4,982 வீடுகளே விற்கப்பட்டிருந்தன.
கனேடிய வீட்டின் சராசரி விலை கடந்த மாதம் 504,350 அமெரிக்க டொலர்களை எட்டியது. இது கடந்த ஆண்டு உடன் ஒப்பிடும்போது 11 சதவீதம் அதிகரித்துள்ளது
ஆரம்ப பருவகால மாற்றங்களுக்குப் பிறகு, ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது பெப்ரவரி மாதம் விற்பனை 14.8 சதவீதம் உயர்ந்துள்ளது என்று ரியல் எஸ்டேட் சபை கூறுகிறது.