பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 16பேர் உயிரிழந்துள்ளனர்.
தென் கொரியாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) மட்டும் 594 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதன்மூலம், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 2931ஆக உயர்ந்துள்ளது.
புதிதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 476பேர் தென்கிழக்கு டேகு நகரத்தை சேர்ந்தவர்கள் எனவும், 60பேர் வடக்கு கியோங்சாங்கை சேர்ந்தவர்கள் எனவும் கொரியா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (கே.சி.டி.சி) தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் துணை சுகாதார அமைச்சர் கிம் காங்-லிப், கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘இந்த வார இறுதியில் ஒரு மதக் கூட்டம் அல்லது எதிர்ப்பு உட்பட பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதைத் தவிர்க்குமாறு நாங்கள் உங்களிடம் கேட்டுள்ளோம். குடிமக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு வலியுறுத்தப்படுகின்றார்கள்’ என கூறினார்.
தற்போது, தென் கொரியாவில், கொடிய கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தேவையான சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.