அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் பலர் காயமடைந்துள்ள நிலையில் அருகிலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நிபந்தனைகளின் அடிப்படையில் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுவதற்கான சமாதான ஒப்பந்தத்தில் ஆப்கானிஸ்தானும் அமெரிக்காவும் கையெழுத்திட்டு சில நாட்களே ஆன நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) தீவிரவாதத் தாக்குதல் நடந்துள்ளது.
1995இல் ஒரு மோசமான உள்நாட்டுப் போரில் மசாரி உள்ளிட்ட முஜாஹிதீன் குழுக்களிடையே ஏற்பட்ட சண்டையின்போது ஹசாரஸின் தலைவரான அப்துல் அலி மசாரி கொல்லப்பட்டார். அவர் கொல்லப்பட்ட 25 ஆம் ஆண்டின் நினைவாக ஷியா பிரிவு மக்கள் காபூல் அருகேயுள்ள டாஷ்-இ-பார்ச்சி பகுதியில் ஒரு நினைவுச் சின்னம் அமைத்துள்ளனர்.
இந்நிலையில், ஷியா பிரிவு அரசியல் தலைவர் அப்துல் அலி மாசியின் நினைவுப் பேரணி இன்று நடைபெற்றபோதே இந்தத் தாக்குதல் நடைபெற்றது.
அப்துல் அலி மசாரி நினைவு தினப் பேரணியில் நாட்டின் முக்கிய நிர்வாகி மற்றும் கடந்த ஆண்டு அதிபர் தேர்தலில் முக்கிய போட்டியாளரான அப்துல்லா கலந்துகொண்டார். பேரணியில் கலந்துகொண்ட அப்துல்லா உள்ளிட்ட பல முக்கிய அரசியல் தலைவர்கள் பலரும் தீவிரவாதத் தாக்குதலில் காயமின்றித் தப்பினர்.
பேரணியில் தாக்குதல் நடத்தியவர்கள் பாதி கட்டி முடிக்கப்பட்ட அடுக்குமாடிக் கட்டிடம் ஒன்றில் பதுங்கியுள்ளதாகவும் துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகளை வெளியேற்ற ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படையினர் முயன்று வருவதாகவும் உட்துறை அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் நஸ்ரத் ரஹிமி தெரிவித்தார்.
இந்தத் தீவிரவாத சம்பவத்திற்கு தலிபான்கள் பொறுப்பேற்க மறுத்துவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.