
சீனாவின் வூஹான் நகரில் சிக்கியுள்ள பாகிஸ்தான் மாணவர்களை மனிதநேயத்தின் அடிப்படையில் மீட்க தயாராக உள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.
இது குறித்து பிரதமர் நரேந்திரமோடி சார்பில் வெளியுறவு அமைச்சகம் மூலம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் பாகிஸ்தான் அரசு இதற்கு எவ்வித பதிலும் வழங்காத நிலையில், குறித்த முயற்சி கைகூடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், வூஹான் நகரில் ஏராளமான பாகிஸ்தான் மாணவர்களும் தங்கியிருந்தனர். மனிதநேய அடிப்படையில் அவர்களை மீட்டு வருகிறோம் என பிரதமர் மோடியின் அறிவுரைப்படி நமது வெளியுறவு அமைச்சகம் சார்பில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
ஆனால் இம்ரான் கானிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இதனால் பாகிஸ்தான் மாணவர்களை அழைத்து வர முடியவில்லை” எனத் தெரிவித்துள்ளன.
கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு நாட்டினர் சீனாவில் இருந்து வெளியேறிவரும் நிலையில், தங்களது நாட்டு மாணவர்களை மீட்க போவதில்லை என பாகிஸ்தான் அரசு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
