சுதந்திர தின நிகழ்வு மட்டக்களப்பிலும் கொண்டாடப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் கலாமதி பத்மராஜா தலைமையில் முப்படைகளின் அனுசரனையுடன் மட்டக்களப்பு வெபர் அரங்கில் இந்நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது.
இதன்போது இலங்கையின் தேசிய கொடியை ஏற்றி, இரு மொழிகளிலும் தேசிய கீதம் இசைத்து நான்கு மதங்களை பிரதிபலிக்கின்ற மதகுருமாரின் ஆசியுடன் இந்நிகழ்வு ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் விமானப் படையின் இணைப்பதிகாரி, மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், உதவி மாவட்ட செயலாளர், திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக உத்தியோத்தர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.